சீதா ராமம்
எப்பொழுதும் எழுத வேண்டும் என்று நினைப்பேன் நினைத்து நினைத்து முக்கியமான நிகழ்வுகளை பதிவு செய்யாமலே காலம் கடந்து விட்டது இனியாவது எழுத முயற்சி செய்கின்றேன் .
இன்று எலுதியே ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணம் அதற்கு காரணம் ஒரு திரைப்படம் அதுவும் இரவு 3 மணிக்கும் எழுத தொடங்க வைக்கின்றது என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீண்ட காலம் கழித்து மனதிற்கு ஆதரசமான எண்ணம் தரக்கூடிய திரைப்படம் பார்த்திருக்கிறேன். இதில் எனக்கு என்ன தோன்றியதோ அதை மட்டும் அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்று வந்தேன் ஏனென்றால் பலருக்கு திரைப்படத்தை பற்றி பல கருத்து வேறுபாடுகள் உண்டு.
எனவே எழுத தொடங்குகிறேன் திரைப்படத்தின் பெயர் சீதா ராமம் இந்த படத்திலிருந்து என் கண்களை எடுக்காமலே தான் பார்த்து கொண்டிருந்தேன் எந்த பாகமும் அவசியம் அற்றது போல தோன்றவில்லை ஏனென்றால் என்னை கொண்டு சென்றதே சீதா ராமா கதாபாத்திரத்தின் உணர்வுகள் தான் என்னை முழுமையாக வைத்திருந்தது. அந்த கதையும் அதேபோல் நம்மை ஆர்வத்துடன் வைத்திருக்கும்.
ஜாதி, மதம் அனைத்து முரண்பாடுகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு சமுதாயம், வேலை இதற்கிடையில் மிகவும் அழகான எழுத்துகளுடைய கடிதங்களும், ஆழமான உணர்வுகளாலும் என்றும் அந்த தருணத்தில் தோன்றும் எண்ணங்களை சந்தோசமாக அனுபவிக்கும் விதமாக அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனி தனியாக திரைப்படத்தில் வரும் காட்சியை பற்றி எழுதினால் இந்த பதிவு முடிவுக்கு வராது, முடிவு பற்றி வார்த்தைகளால் நிறப்ப முடியாது பார்த்து உணர்வால் அனுபவியுங்கள்.
.jpeg)
Comments
Post a Comment