அறியப்படாத தமிழ்மொழி - முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் - 1

அறியப்படாத தமிழ்மொழி என்ற புத்தகத்தை முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் எலுதியுள்ளார். அதில் தமிழில் உள்ள உண்மை பொருந்திய அறிவியல் வரளாரை ஆய்ந்து, தோய்ந்து எலுதப்பட்ட ஒரு நூல். படிக்கும்போது தெளிவோடு படியுங்கள்.
Ariyapadatha Tamilmolzhi Book

இந்த புத்தகத்தில் எக்கசக்கமான தகவல்கள் நிறைந்துள்ளன. இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பகுதிகளில் ஒரு எடுத்துகாட்டை மற்றும் இதில் குறிப்பிட்டுவுள்ளேன். மேலும் உள்ள பகுதிகளை பற்றி வேண்டும் என்றால் Comment Section யில் சொல்லுங்கள் நான் மிதமுல்லதையும் பதிவு செய்கிறேன்.  வாங்க படிக்கலாம்!

1. கல்தோன்றி மண்தோன்றா- தமிழ் பொய்யா ?

கல் தோன்றி மண் தோன்றாக் காளத்தே

வாளோடு, முன் தோன்றிய  மூத்த குடி   

 இது ஒரு பிரபலமான Dialogue  இதில் வரும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி எப்படி தோன்றும். 

மக்கள் பிறந்த பின்னே  தானே மொழி தோன்ற வேண்டும் ?  என்று கேட்பவர்கள் அதில் உள்ள குறல் முழுவதுமாக படித்து விட்டு அர்த்ததுடன் பார்க்க வேண்டும்.

{பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?

வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர்- கை அகலக்

கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, வாளோடு

முந்தோன்றி மூத்த குடி! }

கல்= மலை என்ற பொருளும் உண்டு

மண் = வயல் என்ற பொருளும் உண்டு

தோன்றிற் = திறைமையுடன் வெளிப்படுக, புகழோடு தோன்றுக

Aravan Movie
இதில் ஆநிரை காக்குதல் தான் மெய் பொருள்; ஆநிரை - ஆடு, மாடுகளை மலைகள் தோன்றி வயல்கள் தோன்றுவதற்கு முன்னரே  மற்ற குடிகளிலிருந்து கையில் வாளோடு வெளிப்பட்டு காப்பவர்கள். 

இதற்கு சான்றாகதான் அரவான் என்ற ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தன. 

2.  திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?


இதில் திருக்குறளில் உள்ள முரண்பாடுகளை பற்றி விளக்குவதே இந்த பகுதியின் முக்கியத்துவம். இந்த பகுதியில் உள்ள எடுத்துக்காட்டை கீழே குறிப்பிடுகிறேன்.

    1.  தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
         மெய்வருத்த்க் கூலி தரும்!

   2.  வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி 
        தொகுத்தாலும் துய்த்தல் அரிது!

தெய்வத்தாலேயே முடியவில்லை என்றாலும், உன் முயற்சி பலன் அளிக்கும் என்று முதல் குறளில் சொல்கிறார்.

நீ என்ன தான் முயன்றாலும், வகுத்தவன் ஊழை வெல்ல முடியுமா? என்று இன்னொரு குறளில் சொல்கிறார். எதை நம்புவது?  ஏன் முன்னுக்குப் பின் முரண்? ஐயனே இப்படி செய்யலாமா? 

ஐயன், முரண் செய்யவில்லை! நாம் தான் திருக்குறளை முறணாகவே படித்து பழகிவிட்டோம் ஏனென்றால் திருகுறளை மனப்பாட போட்டி, எலுத்துப் போட்டி, பேச்சு போட்டி என தனித்தானியாக திருக்குறளை பிரித்து நாமே முரண்களை  செய்துவிட்டு ஐயனை குறை கூறினால் எப்படி!

சிறு குழந்தைகளைப் பொருளறியா வயதில் காமத்துப் பால் மனப்பாடம் செய்து, ஒப்பிக்க வைக்கும் நம்மை கண்டால், சான்றோன் ஐயனே சினக்கப்பால் ஏறிவிடுவார்.

திருக்குறள் = (ஓரளவு) உலக நூல்

உலக மக்கள் அனைவருக்கும், 'ஓரளவு பொதுவாக' அறம் - பொருள்-இன்பம் உரைக்க விரும்பினான் ஐயன் வள்ளுவன். 

கடினமான பணி தான்! அதனால் தான் முல்லை, குறிஞ்சி என்ற அகத்திணை இலக்கணம் கூடக் கடந்து; தமிழ் என்ற சொல்லைக் கூட குறளின் எங்குமே பயன்படுத்தாது, 

'ஓரளவு பொதுவாகவே' அறம் உரைத்தான்! அந்த ஓரளவு பொதுவிலும், எல்லாக் குறளும் எல்லாருக்கும் அல்ல ! அவரவர் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவே குறள்; இதை மனத்தில் வையுங்கள். 

  • மனித வாழ்க்கையின் விதங்கள் ( இல்லறம்/ துறவறம்)
  • மனிதனின் நிலைகள் ( அரசன்/ அமைச்சு/ குடிமக்கள்)
  • மனிதர்களோடு உறவு கொள்ளும் முறை ( காதல்/ நட்பு)
அவரவர்க்கு அவரவர் சூழலில், அவரவர் அறம் உரைக்கின்றார். ஒரு சூழல், ஒருவருக்குப் பொருந்தும், இன்னொருவருக்குப் பொருந்தாது. 

அதனால் தான் எல்லா குறளும் எல்லோருக்கும் அல்ல!

3. அணுவைத் துளைத்து... தமிழர் அறிவியலா?

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல,என்று தொடங்குகிற whatshapp Messagerகள் , எனக்கு வந்தது போலவே உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன்.

உண்மை நம் முன்னோர்கள் எல்லாரும் முட்டாள்கள் அல்ல! ஒவ்வொரு காலச் சமூகத்திலும் அறிஞர்களும் உண்டு ; முட்டாள்களும் உண்டு; இன்றைய காலம் போலவே! காலம் என்பது வளர்ச்சியின் சுழற்சி; சுழன்று கொண்டே தான் இருக்கும். 

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் 
குறுகத் தறித்த குறள் (திருவள்ளுவமாலை, ஒளவையார்)

அணுகுவதால், அணு; அணுகுதல் = நெருங்குதல்; முகச் சிறிய பொருட்களை, நெருங்கிப் பார்த்தால் தானே தெரியும்? 

இதைத் தானே, இன்றைய நுண்ணோக்கு (Microscope) செய்யும்? இலக்கியத்திலோ மண்துகள், கடுகு, மயிர்நுனி எல்லாமே'அணு' தான் ! பின்னாளில் Atom எனும் Technical Term/  கலைச்சொல்லுக்கும் 'அணு' என்றே ஆகி வந்தது

Atom = அணு; Nucleus = கரு ; சங்கத் தமிழில், கருப்பொருள் என்று வருவதால், அதை Nucleus/proton/Neutron என்றெல்லாம் பொருள் எடுத்துக்க முடியுமா ?

இதுபோல், பல நுண்- செய்திகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு; ஆனால் அவை அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஆகா? அவை ஒரு வளமான கற்பனையே! பின்னாளில் அது போன்ற கற்பனைகளை நனவாக்கியது அறிவியல் ஊழி! (யுகம்)

4. முருகன்=தமிழ்க் கடவுளா?
சம்ஸ்கிருதக் கடவுளா?


Tamil Gods

கடவுள் முருகனை பற்றி எவ்லோவோ Logic இல்லாத கதைகளை கேற்று இருப்பிர்கள். தமிழ் கடவுள் முருகனை பற்றி அதாரத்துடன் இந்த பகுதியில் குறிப்பிடுகிறார். 

முதலில் முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?

முருகன் = தமிழ் ஆதிகுடிகளின் தெய்வம்; அவன் முறைமைகளை அறிந்தால், ஆதிகுடித் தமிழ் மக்களின் வாழ்வியலை நாம் அறியலாம். 

இன்றைய தமிழர்களின் மரபுவழிப் பாதையும் நன்கு அறியலாம். அதனால் முருகன் = தமிழ்க் கடவுள்! மற்றபடி, எல்லையிலாது எங்கும் பரந்து கடவுளுக்கு ஏது மொழியும், இனமும் நாடும்? இறைமை = பொது! தெய்வம் = அவரவர் மரபு! 

தமிழர்களின் மரபியலில், தெய்வம் என்று சொல்லே வேறு! Theivam அது Deivam அல்ல ! தெய்வம்/கடவுள் = பால் அறியாக் கிளவி; இறைவன் = பால் அறி கிளவி

சரி, முருகன் மட்டுமே தமிழ்க் கடவுளா? இல்லை!

4. மாயோன் எனும் திருமாலும், கொற்றவையும் கூட தமிழ் கடவுளே!

முதலில்  முல்லை = காடு பகுதி, குறிஞ்சி = மலை பகுதி மருதம் = புல்வெளி சார்ந்த பகுதி  பாலை = பாலைவனம் போல் உள்ள பகுதி

தமிழ் மரபியல் = இயற்கை சார்ந்த ஒன்று ! அதீதமான கதைகள், புராணங்கள், மாயமந்திரச் சாலம் இராது! எதற்கெடுத்தாலும் ஒரு கதை எதிர்பார்க்கும் புத்தியை நாம் விட்டுருவோம்.  

உலகில், மற்ற தொன்ம இனங்களைப் போல், தமிழ் இனமும் இயற்கையாக  வள்ர்ந்து, படிமலர்ச்சி (Evolution) பெற்றதே. 

தமிழ் எந்தச் சைவக் கடவுளாலும் உருவாக்கப்படவில்லை; ஒரு மொழி அப்படி உருவம் ஆகாது! மனித வளர்ச்சியே = மொழி வளர்ச்சி !

ஆதிகுடிகள், காடு/மலைகளில் வசித்தனர்;  அதுவே முல்லை/குறிஞ்சி! சினிமாலில் வரும் காட்டுவாசி போல முடிவு கட்டி விடாதீர்கள் அவர்களுக்கும் உணவு, உடை,வீடு, சமூகம், மொழி, கலை, போர், இசை, பணம் என்று பல உண்டு! குடி சார்ந்த இயற்கை வாழ்வு; அவ்வளவே!

முல்லையின் தலைவன் = மாயோன் ( திருமால் )
குறிஞ்சியின் தலைவன் = சேயோன் ( முருகன் )

சேயோன்/மாயோன், அந்தக் குடிகளின் Evolution-இல் என்றோ மைந்து, குடிகாத்த தலைவர்களே; மாயாஜாலத் தெய்வங்கள் அல்ல! முருகனுக்கு அம்மா அப்பா யாரு ? தெரியாது; ரொம்ப ரொம்ப ஆதிகுடி!

குடி வளரவளர என்ன ஆகின்றது? தங்களுக்கென தனித்த இன அடையாளங்கள் உருவாகின்றன; 

என்றோ குடிகாத்த தங்களின் வீரத் தலைவர்கள் = தெய்வங்கள் ஆகின்றனர். அவர்களை முன்னிட்டுக் கொண்டு, குடி மேலும்மேலும் வளர்கிரது!

எவ்வளவு நாள் தான், காட்டில் / மலையிலேயே வாழ்வது என்று அதன் பின்  மலையிலிருந்து இறங்கும் ஆற்றை ஒட்டியே, வயல்வெளிக்கு வந்தார்கள். 

வேறு உணவுமுறை/ வேளாண்மை கண்டார்கள். குடி மேலும் வளர்ந்தது. முல்லை/குறிஞ்சி' நகர்ந்து விரிந்து... இப்போ 'மருதம்' மலர்ந்தது!

மருதம் = வயல்வெளி நாகரிகம்; புதிய வாழ்க்கைமுறை; புதிய தலைவன்! யார் அவன் ? = அவனே வேந்தன் ! சிறிய நிலக்கிழானில் துவங்கி, பெரும் பண்ணை தலைவன் ஆகி, நாட்டின் வேந்தனும் ஆனான். 

வேந்தன் மாறிக் கொண்டே இருப்பான்; ஒரு வேந்தன் போய், அடுத்த வேந்தன், அதற்கெடுத்த வேந்தன்! அதனால் வேந்தன் = முருகனோ/ திருமால் போல் தனித்த அடையாளம்' கிடையாது; 

தனியாகக் கோயிலோ, மக்கள் வாழ்வியல் கூத்தோ வேந்தனுக்கு கிடையாது! இறைவன் என்ற சொல், இறை (வரி) விதித்த வேந்தனையே குறித்தது! பின்பே தெய்வம்/கடவுள் என்ற பொருளைப் பெற்றது! 

முல்லை/ குறிஞ்சி நீங்கிவிட்டதால் தங்கள் பழைய அடையாளங்களையும் விட்டுவிடுவார்களா? பழைய முருகனுக்கும் / திருமாலுக்கும் புதிய நிலத்திலும் கோயில்கள் உண்டு. 

புதிய நகரமான மருத நிலத்தில் ஒரே தலைவன் யாரும் கிடையாது காலத்திற்க்கு ஏற்றவாறு மாறுவார்கள்.

இதோடு மனித பயணம் முடியவில்லை  மருத நில ஆற்றையொட்டியே மேலும் மேலும் நகந்தால் எங்கு போய் முடியும் ? கடலில் தானே! அதுவே 'நெய்தல்' ஆயிற்று !

கடல் பகுதியில் காற்று!  அதுவே, புதிய நிலத்தின்/ நகரத்தின் தெய்வத் துணையும் ஆகியது. வருள்+நன்= வருணன்; வருளுதல் = சூழுதல்; நிலத்தைச் சூழும் கடற்காற்று! 

அதுவே புதிய நிலத்தெய்வம். வருணன் அடையாளம் எதுவும் கிடையாது காற்றையே வழிபட்டார்கள். 

பேர் ஒன்றுபோல் இருப்பதாலேயே, இது சம்ஸ்கிருத வருண பகவான் அல்ல ! 

வேத வருண பகவான் = மழை, ஆறு, குளம் எல்லா நீருக்கும் அதிபதி
தமிழ் வருள்நன் = கடற்காற்று மட்டுமே 

பேர்கள் ஒன்று போல் ஒலித்தாலும், அவை வெவ்வேறு வேர்ச்சொற்கள்

ஆக, நீங்கள் 'தெளிய' வேண்டியது:

சேயோன்/முருகன் = சுப்ரமண்யன் அல்ல! ஆதிகுடித் தலைவன்!

மாயோன்/திருமால் = விஷ்ணு அல்ல! ஆதிகுடித் தலைவன்!

வேந்தன் = இந்திரன் அல்ல! பல அரசர்கள்! நிலைத்த அடையாளம் இல்லை!

வருள்நன் = வருணபகவான் அல்ல! கடற்காற்று! அடையாளம் இல்லை!

கொற்றவை = துர்கா தேவி அல்ல! பாலை முதுமகள்!

இவர்கள், இயற்கை வழிவந்த நிலத் தொன்மங்கள்! நினைவாக நடுகல்லும், அக் கல்லில் உருவம் எழுதிய கோட்டமும், கூத்தும், என ஆதிமக்கள் வாழ்வியலே!

.மயில் = குறிஞ்சி, நிலப் பறவை வேல் = குறிஞ்சி, மலை மறவர், வேட்டுவ ஆயுதம்

காவடி = குறிஞ்சி, மலை மேல் பாரம் சுமக்கும் எளிய கருவி

எவையெல்லாம் குறிஞ்சியின் கருப் பொருட்களோ, அவையெல்லாம் அந்த நிலத் தலைவனுக்கும் ஆகி வந்தன. அவ்வளவே! வேறு எந்த இடும்பன்/சூரன் பொய்க் கதையும் இல்லை.

மேலும் இந்த புத்தகத்தில் மீண்டும் உள்ள  பகுகிகளை பற்றி வேண்டு என்றால் Comment Section யில் பதிவிடுங்கள். இந்த புத்தகத்தை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய நூல். வாங்கி படியுங்கள்!

Comments

  1. புத்தகத்தைப் படித்தாயா? நல்ல புத்தகம். பிழைகள் கவனம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாமா‌. படித்து விட்டேன். பிழைகளை திருத்தி கொண்டே தான் வருகிறேன்.

      Delete

Post a Comment

Popular Posts