Uzhgorod Art Museum
நான் மற்றும் என் நண்பன் இருவரும் அருகே உள்ள joseph bokshay கலை அருங்காட்சியத்திற்க்கு சென்று வரலாம் என்று பேசிக்கொண்டோம்.
| நான் தங்கியுள்ள நகரம் |
என் கூடே உள்ள நண்பன் என்னை போல் இயற்கை இரசிப்பு தன்மையுள்ளவன், புத்தக புலு மற்றும் ஊர் சுற்றும் வாலிபன். எனக்கு இந்த இரசிப்பு தன்மையை தூண்டியதே அவன் தான் ஒரே வார்த்தையில் கூறினால் என்னுடைய Senior😃.
எப்போது நாங்கள் வெளியில் சென்றாலும் இருவரும் ஒரு தலைப்பு எடுத்துவிட்டால் அந்த பேச்சு வார்த்தை நீடித்துக்கொண்டே தான் இருக்கும். அந்த உரையாடல் வெட்டி பேச்சாக எப்போதும் இருக்காது அது தகவல் அறியகுடியதாகவும், சமூகம் சார்ந்த உரையாடலாக தான் இருக்கும். .
அருங்காட்சியகத்தை காண இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு சாலையில் நடக்க துவங்கினோம். அன்று பனிபொழிவு இல்லை ஆனால் சாலை எங்கிலும் பனிகள் நிறைந்திருந்தன.
எப்போது போல் பேசிக்கொண்டே அருங்காட்சியத்திற்கு வந்தடைந்து விட்டோம். அருங்காட்சியம் உள்ளே அனைத்து விதமான ஓவியங்கள் மற்றும் சிலைகள், பழமை வாய்ந்த பொருட்கள் நிறைந்து இருந்தன. வெவ்வேறு நாடுகளில் உள்ள ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள்.
அதோடு ஒரே மரத்தில் செதுக்கிய சிற்பங்களும் விதவிதமான வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
நான் கண்டதை நீங்களும் காணுங்கள். சில படங்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.
நன்றி 👍
ReplyDelete