Think Like A Monk - Jay Shetty

 இந்த புத்தகத்தை பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த போது AUDIO புத்தக முறையில் கேட்டுக்கொண்டிருந்தேன்  3 மணி நேரம் 30 வினாடி பதிவு.   சில புத்தகங்களை AUDIO புத்தக முறையில் கேட்டு அதனுடைய சாரத்தை எடுத்துகொள்வேன். அதேபோல் இந்த புத்தகத்தை கேட்க தொடங்கினேன். 

பதிவின் மையப் பகுதிக்கு வருவரை என் கவனம் சிதறமல் அதிலேயே கூர்ந்துகவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.  பதிவில் நடுநிலைக்கு வரும்பொலுதே ஒன்றை முடிவு செய்தேன் இந்த புத்தகம் கட்டாயம் காகித புத்தகமாக  வாங்க வேண்டும் என்று.  

ஏனென்றால் அனைத்துவிதமான முக்கிய மற்றும் மேம்படுத்த கூடிய கருத்துகளும் இந்த புத்தகத்தில் உள்ளடைங்கியுள்ளது அதனாலயே தவற விட கூடாது என்று என்னினேன்

இதை கேட்டுக்கொண்டு வரும்பொலுது  ஒரு பதிவு நினைவில் தோன்றியது 

  If  You Can't Explain Something Simply, You Don't Understand it well Enough. 

இதை அந்த புத்தகத்திலும் மேற்கோல் காட்டியுள்ளார் JAY SHETTY இதற்கு எடுத்துக்காட்டாக தான் இந்த புத்தகம் அமைந்துள்ளது. 

JAY SHETTY 3 வருட காலம் துறவிகளுடன் செலவிட்ட நேரத்தின் மதிப்பை நம்மிடையே கொண்டு சேர்த்திருகிறார். 

இதை Audio Book கேட்டு முடித்தவுடன் சிறிது காலம் கழித்து இதை  காகித புத்தகமாக  வாங்கினேன் அந்த சிறிது காலமும் எனக்கு வாங்க வேண்டும் என்று எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து முக்கிய பதிவுகளையும்  அடிக்கொடிட்டு பதிவுசெய்து படித்துக்கொண்டுள்ளேன். 

ஒவ்வொரு முறை இந்த புத்தகத்தை பார்க்கும்பொலுது மனதில் உறுதி மற்றும் சந்தோஷமான எண்ணம்   எலும். முதல் புத்தகமே JAY SHETTY யின்  ஒரு மிக சிறந்த படைப்பாக  உள்ளது

Comments